/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ஆர்.சி., புக்' தபாலில் அனுப்புவதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
/
'ஆர்.சி., புக்' தபாலில் அனுப்புவதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
'ஆர்.சி., புக்' தபாலில் அனுப்புவதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
'ஆர்.சி., புக்' தபாலில் அனுப்புவதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:35 AM
நாமக்கல்:
தமிழக கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பு, நாமக்கல் மாவட்ட கார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் (வடக்கு) முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சிவா, மாநில துணைத்தலைவர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய போக்குவரத்து சட்டத்தால், வாகன வணிகனை நசுக்க வேண்டாம். ஆர்.சி., புத்தகத்தை கையில் கொடுப்பதை நிறைவேற்ற வேண்டும். டிரேடர் லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை எளிமையாக்க வேண்டும்.
தபால் மூலம் ஆர்.சி., புத்தகம் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.