/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிப்காட் அமைக்கும் உத்தரவில் முறைகேடு சி.பி.ஐ., விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 17, 2025 02:01 AM
நாமக்கல் நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பாக விவசாயிகளின், 483 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் நிலைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், இதுவரை 135க்கும் மேற்பட்ட போராட்டங்களும், 500 நாள் தொடர் காத்திருப்பு போராட்டமும், தற்போது வாரந்தோறும் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சிப்காட் அமைப்பதற்கான அரசு உத்தரவில், விதிமுறைகளை மீறி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து மத்திய சி.பி.ஐ., மூலம் விசாரணை நடத்த வேண்டும் என, சிப்காட் இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.