/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மயானம் அமைத்து தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
/
மயானம் அமைத்து தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 21, 2025 06:37 AM
நாமக்கல்: இ.கம்யூ., சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து, தொட்டிப்பட்டி பஞ்சாயத்தில், 70 குடும்பங்களை சேர்ந்த போயர், ஆசாரியார், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு, மயான வசதி
இல்லாததால், ஆத்துமேடு திருமணி-முத்தாறில், நீருக்கடியிலும், சகதியிலும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவலம் நீடிக்கிறது. அதனால், போர்கால அடிப்ப-டையில், புதிய மயானம் அமைத்துத்தர வேண்டும் என்பது உள்-பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள்
உள்பட பலர் பங்கேற்றனர்.

