ADDED : மார் 10, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
கு.பாளையம்: குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, நேரு நகரில், 150க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த, 10 நாட்களாக, இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. பண்-டிகை காலம் என்பதால், குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.இதனால், நேற்று இரவு, 8:30 மணிக்கு, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நேரு நகர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர். குமாரபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
