/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மறியல் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது
/
மறியல் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : பிப் 13, 2026 07:33 AM
ராசிபுரம்: தமிழகத்தில், தற்போது வருவாய்த்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம், 1,500 ரூபாய், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரி, தெலுங்கானா, டில்லி மற்றும் திரிபுரா மாநிலங்களில் உதவித்தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை போல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, மாநிலம் தழுவிய தொடர் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் அருகே நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
ஆத்துார் சாலையில் நடந்த மறியல் போராட்டத்தில், 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தால் ஆத்துார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

