/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மருத்துவ கல்லுாரிக்கு காளியண்ணன் பெயர் சூட்டாவிட்டால் போராட்டம்'
/
'மருத்துவ கல்லுாரிக்கு காளியண்ணன் பெயர் சூட்டாவிட்டால் போராட்டம்'
'மருத்துவ கல்லுாரிக்கு காளியண்ணன் பெயர் சூட்டாவிட்டால் போராட்டம்'
'மருத்துவ கல்லுாரிக்கு காளியண்ணன் பெயர் சூட்டாவிட்டால் போராட்டம்'
ADDED : ஜூலை 23, 2025 01:45 AM
நாமக்கல், ''சுதந்திர போராட்ட தியாகி காளியண்ணன் பெயரை, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரிக்கு சூட்டாவிட்டால், கொங்கு அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என, கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் லோக்சபா எம்.பி.,யும், தமிழகத்தின் முதல் சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவரும், சுதந்திர போராட்ட தியாகியுமானவர் காளியண்ணன். இவர், தன் சொந்த நிலம், 2,000 ஏக்கரை, ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லுாரிகள் உருவாவதற்கும், கொல்லிமலைக்கு சாலை வசதி செய்து தரவும் காரணமாக இருந்துள்ளார்.
இத்தனை பெருமைக்குரிய தியாகி காளியண்ணன் பெயரை, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரிக்கு சூட்ட வேண்டும் என, கொங்கு அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைவிடுத்து வருகிறோம். இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர், இந்த விசயத்தில் நேரடியாக தலையிட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரிக்கு தியாகி காளியண்ணன் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், ஈரோடு, கரூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கொங்கு அமைப்புகளை ஒன்று திரட்டி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.