/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி வழங்கக்கோரி வரும் 22ல் சேலம் ஆவின் முன் ஆர்ப்பாட்டம்
/
பால் லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி வழங்கக்கோரி வரும் 22ல் சேலம் ஆவின் முன் ஆர்ப்பாட்டம்
பால் லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி வழங்கக்கோரி வரும் 22ல் சேலம் ஆவின் முன் ஆர்ப்பாட்டம்
பால் லிட்டருக்கு ரூ.15 உயர்த்தி வழங்கக்கோரி வரும் 22ல் சேலம் ஆவின் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 07:16 AM
நாமக்கல்: 'பால் லிட்டர் ஒன்றுக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்கக்கோரி, வரும், 22ல், சேலம் ஆவின் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக விவசாயிகள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக விவசாயத்தில் ஒருபகுதியாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பால், தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு, ஊக்கத்தொகை, மூன்று ரூபாயுடன் சேர்த்து, 38 ரூபாய்; எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விலை, தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. அதனால், தற்போது வழங்கப்பட்டு வரும் பால் கொள்முதல் விலையில் இருந்து, பசும் பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என, பல முறை கோரிக்கை வைத்துள்ளோம்.ஆனால், தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் உள்ளது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.உனடியாக பாலுக்கு, தற்போதுள்ள விலையில் இருந்து லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி, முதல் கட்டமாக, சேலம் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் பால் பண்ணை முன், வரும், 22ல், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் முன், தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

