/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நுாறு நாள் வேலை கேட்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
/
நுாறு நாள் வேலை கேட்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2024 01:31 AM
நாமக்கல், டிச. 18-
நுாறு நாள் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழுவினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், நுாறு நாள் வேலை எனக்கூறி, 50 நாள், 60 நாள் வேலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. நுாறு நாள் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும், 100 நாள் வேலை கொடுக்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் வேலை வாய்ப்புக்கும், வருமான ஆதாரத்துக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியின் அளவை குறைத்து வருகிறது என, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.