/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 01:52 AM
நாமக்கல், உழவர் அலுவலர் தொடர்பு-2.0 திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் திவ்யா தலைமை வகித்தார். துணை செயலாளர் சுகன்யா முன்னிலை வகித்தார்.
இதில், தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், கொண்டு வரப்பட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0 என்ற அரசு ஆணையை விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும்.இத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை, பிற துறையுடன் இணைக்கும்போது, நாட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என கோஷம் எழுப்பினர்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வட்டாரங்களில் இருந்தும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், 100க்-கும் மேற்பட்டோர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.