/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
/
நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 01:30 AM
நாமக்கல், மத்திய அரசின் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் சையத் முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குப்புசாமி கோரிக்கையை விளக்கி பேசினார்.
அதில், ஊதியக்குழுவின் பரிந்துரைகளிலிருந்து நீக்கி வைக்கும் மத்திய அரசின் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி தந்திட நிதி மேலாளர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். 1995ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.