/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரைச்சுற்றி அதிகளவில் மழைநீர் தேங்கியதால் இலவச வீட்டுமனை கேட்டு போராட்ட எச்சரிக்கை
/
ஊரைச்சுற்றி அதிகளவில் மழைநீர் தேங்கியதால் இலவச வீட்டுமனை கேட்டு போராட்ட எச்சரிக்கை
ஊரைச்சுற்றி அதிகளவில் மழைநீர் தேங்கியதால் இலவச வீட்டுமனை கேட்டு போராட்ட எச்சரிக்கை
ஊரைச்சுற்றி அதிகளவில் மழைநீர் தேங்கியதால் இலவச வீட்டுமனை கேட்டு போராட்ட எச்சரிக்கை
ADDED : அக் 23, 2025 01:23 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் பகுதியில் பெய்த கன மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், குலத்துவலவு பகுதியில், கடந்த, 50 ஆண்டுகளாக, 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதுவரை இப்பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கவில்லை. மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இக்கிராமத்தின் அருகே, 150 ஏக்கர் நிலப்பரப்பில் இலுப்புலி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் உபரிநீர் மற்றும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி ஊற்று நீராக உருவெடுத்துள்ளதால் மக்கள் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள் நடக்க முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இங்கு, 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணால் கட்டப்பட்ட குடியிருப்பாக உள்ளதால் மழைக்காலங்களில் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. கூலி தொழிலாளர்கள் மட்டுமே வசித்து வருவதால், மக்கள் சொந்தமாக ஆடம்பர குடியிருப்பு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாற்று இடம் வழங்க வேண்டும் என மக்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடியிருக்க ஏற்ற சூழல் இல்லாததால் நாளுக்கு நாள் இங்கு வசிக்கும் இளைஞர்கள் ஊரைவிட்டு வெளியேறி வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போது மழைபெய்து வருவதால், ஊரைச்சுற்றி அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் அபாய நிலை உருகியுள்ளது. எனவே, இது சம்பந்தமாக, வருவாய்த்துறை அதிகாரிகள் தலையீடு செய்து போர்க்கால அடிப்படையில் இப்பகுதி மக்களுக்கு மாற்று இடத்தில் இலவச வீட்டு மனை ஒதுக்கீடு தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காத
பட்சத்தில், நாளை அதிகாரிகளை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்தனர்.