/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக்கால் தீமை 'மஞ்சப்பை' வழங்கல்
/
பிளாஸ்டிக்கால் தீமை 'மஞ்சப்பை' வழங்கல்
ADDED : ஜன 01, 2026 08:04 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சி மூலம் பிளாஸ்-டிக்கால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில், பள்ளிப்பா-ளையம் பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம் மற்றும் முக்கிய இடங்களில், கலை நிகழ்ச்சி மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு-கின்றனர். மேலும், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க, 'மஞ்சப்பை' பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றனர். அதை தொடர்ந்து, பொதுமக்களிடம், 'மஞ்சப்பை' வழங்-கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நக-ராட்சி சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்-டனர்.

