/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல், உணவு வழங்கல்
/
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல், உணவு வழங்கல்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல், உணவு வழங்கல்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல், உணவு வழங்கல்
ADDED : ஜூலை 30, 2025 01:35 AM
குமாரபாளையம், மேட்டூர் அணையில் இருந்து, ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட தி.மு.க., செயலர் மூர்த்தி நேற்று நேரில் வந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தாசில்தார் சிவக்குமார், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், முன்னாள் நகர செயலர் செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
* குமாரபாளையம் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும் வெள்ள பாதிப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது வருவாய் துறையினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.