ADDED : ஜன 13, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'உலகம் உங்கள் கையில்' திட்-டத்தில், 267 லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி கல்-லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி தலை-மையில் நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன், நகர்மன்ற துணை தலைவர் வெங்கடேஷ் ஆகியோர், மாணவ, மாணவிய-ருக்கு லேப்டாப் வழங்கி, அதன் முக்கியத்துவம், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வலி-யுறுத்தி பேசினர். பேராசிரியர்கள் ரகுபதி, ஞான-தீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
