ADDED : ஜன 20, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்: கல்லுாரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக, தமிழ-கத்தில், முதல் கட்டமாக, 10 லட்சம் மடிக்கணி-னிகள் வழங்கும், 'உலகம் உங்கள் கையில்' திட்-டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின்
துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழு-வதும், மாவட்டம் தோறும், அரசு கலை கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மடிக்
கணினி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். எம்.பி.,ராஜேஸ்குமார், 130 மாணவ, மாணவியருக்கு, இலவச மடிக்கணினி வழங்கினார். கல்லுாரி முதல்வர் காசிம் முகம்மது, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
