/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
/
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
ADDED : ஆக 06, 2025 01:09 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், கடந்த, 15ல் தொடங்கி நடந்து
வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், 238 சிறப்பு முகாம்கள், வரும் செப்., 30 வரை நடக்கிறது. இதையொட்டி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபம், பள்ளிப்பாளையம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிள்ளாநல்லுார் டவுன் பஞ்.,ல், செங்குந்தர் சமுதாய கூடம்.
மண்டகப்பாளையம் புறநகர் பகுதியில், கிராம பஞ்., சேவைமைய கட்டடம், கொல்லிமலை வட்டாரத்தில், ஆரியூர்நாடு தெம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சந்தைப்பேட்டை செங்குந்தர் மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் நேற்று நடந்தது. நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபம், மண்டகப்பாளையம் ஆகியவற்றில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடி தீர்வாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, மண்டகப்பாளையம் பகுதியில், வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு, 'பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

