/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 17, 2025 02:32 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, பல்லாக்காபாளையம் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்துவை, கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து விளையாட்டு உபகரணங்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, விளையாட்டு வீரர்களின் ஆர்வத்தை கண்டறிந்து, உடனடியாக பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் நாச்சிமுத்து, தன் சொந்த செலவில், 40,000 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வீரர்களிடம் வழங்கினார். மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் சவுந்தரம், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.