/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய தார்ச்சாலையில் பள்ளம் தோண்டியதால் ஒப்பந்ததாரரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

ADDED : அக் 05, 2025 01:25 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் பஞ்., பஸ் ஸ்டாப் அருகே, குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதே இடத்தில் நேற்று பொக்லைன் மூலம், பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் பைப்லைன் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் சாலை சேதமடைந்ததை கண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வாகனத்தை மறித்து ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோனிகா, சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'குடிநீர் குழாய் பைப்லைன் பணிகள் முடிந்தவுடன், ஒரு வாரத்திற்குள் புதிய தார்ச்சாலை அமைத்து தரப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.