/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
/
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில் ஆயுத பூஜை கொண்டாடிய பொதுமக்கள்
ADDED : அக் 02, 2025 02:11 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், வீடு, வர்த்தக நிறுவனம், பட்டறைகளில், ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆயுதபூஜை, நேற்று கொண்டாடப்பட்டது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், பட்டறைகள் சுத்தம் செய்யப்பட்டது. மேலும், டூவீலர், கார், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களும் சுத்தம் செய்யப்பட்டு, பூ, மாலை போட்டு அலங்கரித்தனர்.
தொடர்ந்து, வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், லாரி பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், வாழை மரங்கள், வண்ண காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது.
அதையடுத்து, சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல் வைத்தும், பழங்கள், பொரி உள்ளிட்ட பொருட்களை கொண்டு, பூஜை செய்து வழிபட்டனர். பணியாளர்கள், உறவினர்கள், பொதுமக்களுக்கு பொங்கல், பொரி கொடுத்து உற்சாகமாக ஆயுத பூஜையை கொண்டாடினர்.
* நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சென்டர் ஹாலில், சரஸ்வதி சுவாமி சிலை உள்ளது. சுவாமி சிலைக்கு வர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன் தலைமையில், உதவி தலைமையாசிரியர் உமாமாதேஸ்வரி, ஆசிரியர் சுமதி, முதுகலை ஆசிரியர் ஜெகதீசன், ஓவிய ஆசிரியர் சேகர், உடற்கல்வி ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் மாலை அணிவித்து, தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்தனர்.