/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 546 மனுக்கள் வழங்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 546 மனுக்கள் வழங்கல்
ADDED : நவ 04, 2025 02:02 AM
நாமக்கல்,  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி,  சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம், 546 மனுக்களை அளித்தனர். அவற்றை பரிசீலித்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில், ஒரு பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆட்டோ மானியம், ஐந்து பயனாளிகளுக்கு, தலா, 50,000 ரூபாய் வீதம், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கல்வி நிதியுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மூன்று பேருக்கு, தலா 15,750 ரூபாய் வீதம், 47,250 ரூபாய் மதிப்பில் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரியில் இயங்கி வரும் ரத்த வங்கிக்கு, அதிக அளவில் ரத்த தான முகாம் அமைத்து கொடுத்த, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசுவிற்கு, கலெக்டர் கேடயம் வழங்கி பாராட்டினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சரவணன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு உள்பட பலர் பங்கேற்றனர்.

