/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோடை மழையால்பொதுமக்கள் மகிழ்ச்சி
/
கோடை மழையால்பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 17, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில், சில நாட்களாக கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகி வந்தனர்.
நேற்று அதிகாலை மற்றும் காலையில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஆனால், சாலையோர கடைகளில் வியாபாரம் பாதித்தது.
* கொல்லிமலையில், நேற்று மதியம், 2:00 மணி முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையால், சோளக்காடு, செம்மேடு, அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலையில் சென்றது. இதனால், மலையில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.