/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலை வாங்கி தருவதாக ரூ.22 லட்சம் மோசடி மக்கள் தொடர்பு துறை போட்டோகிராபர் கைது

ADDED : மார் 06, 2025 03:38 AM
நாமகிரிப்பேட்டை: வேலை வாங்கி தருவதாக, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த, திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை போட்டோ-கிராபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, தொ.பச்சுடையாம்பா-ளையம் தலைவர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்தானமூர்த்தி, 44; திருவள்ளுவர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலக போட்-டோகிராபராக பணியாற்றி வந்தார். நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பணியற்றியுள்ளார். கடந்த, 2021ல் ராசிபுரம் அடுத்த கல்கட்டானுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வ-குமாருக்கு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி-யுள்ளார். இதற்காக, 22 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார், ஆனால், வேலை வாங்கி தராமல், பணத்தையும் தரவில்லை. நாமக்கல் எஸ்.பி.,யிடம் கிருஷ்ணமூர்த்தி புகாரளித்தார். இதையடுத்து சந்-தானமூர்த்தியை கைது செய்ய, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் மாவட்டத்துக்கு சென்று, சந்தானமூர்த்-தியை கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷ-னுக்கு நேற்று காலை அழைத்து வந்தனர்.