ADDED : செப் 09, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:'கொன்னையார் கிராமத்தில், இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
திருச்செங்கோடு
தாலுகா, கொன்னையார் கிராமத்தில், இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம்
நடக்கிறது. கலெக்டர் மதுபாலன் தலைமை வகிக்கிறார். முகாமில்,
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை
கேட்டறியப்படுகிறது.
திருச்செங்கோடு தாலுகா, கொன்னையார்
மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது
கோரிக்கைகளை, முகாமில் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
