ADDED : ஆக 17, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், காவிரி பஸ் ஸ்டாப் அருகே இரவு, பகலாக புதுச்சேரி மது பாட்டில் விற்பனை செய்யபட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு மது விலக்கு போலீசார், நேற்று மாலை காவிரி பகுதியில் கண்காணித்து வந்தனர்.
அப்போது, லோகநாதன், 65, என்பவர் புதுச்சேரி மது விற்பனை செய்து கொண்டிருந்தார். திருச்செங்கோடு மது
விலக்கு போலீசார், லோகநாதனை கைது செய்து, அவரிடம் இருந்து கேனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முக்கால் லிட்டர் புதுச்சேரி மதுவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு கேனில் மது வாங்கி வந்து, அதிக விலைக்கு காவிரி பகுதியில் பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.