ADDED : டிச 19, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்-ளது. இக்கோவிலில் உள்ள, 2 தேர்கள் நிறுத்துவதற்காக, தேர்-மேடை உள்ளது. இந்த தேர்மேடை கட்டப்பட்டு பல ஆண்டு-களை கடந்ததால், பழுதடைந்து காணப்பட்டது.
இதையடுத்து, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரிய தேர் மேடை கட்டும் பணி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று சிறிய தேர் மேடை கட்டும் பணிக்காக, பூமிபூஜை நடந்தது. இதில், முன்னாள் சேர்மன் நடேசன், முன்னாள் மாணவர்கள் செந்தில்குமார், கலைச்செல்வி, தனபால், சாய் பாலமுருகன், செயல் அலுவலர் கீர்த்தனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.