/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பணிக்கு பூஜை அமைச்சர் பங்கேற்பு
/
சாலை பணிக்கு பூஜை அமைச்சர் பங்கேற்பு
ADDED : செப் 23, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 10வது வார்டு, கலைஞர் நகர் சிராப்பள்ளியார் காடு பகுதியில், சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில், சாக்கடையுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்க, நேற்று பூமி பூஜை நடந்தது.
அமைச்சர் மதிவேந்தன், பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றி-யக்குழு உறுப்பினர் துரைசாமி, டவுன் பஞ்., துணைத்தலைவர் கண்ணன், இ.ஓ., விஜயன், வக்கீல் நடராஜ், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.