/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் இ.வி.எம்., மிஷின் சரிபார்ப்பு பணி பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் ஆய்வு

ADDED : டிச 13, 2025 05:49 AM

நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்., மிஷின்) சரிபார்ப்பு பணியை, பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனர் எஸ்.எஸ்.பால் ஆய்வு செய்தார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எலக்ட்ரானிக் ஓட்-டுப்பதிவு இயந்திர கிடங்கில், மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு தேவையான இ.வி.எம்., மஷின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.தமிழக சட்டசபை தேர்தல்-2026ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, முதல் கட்ட சரிபார்ப்பு பணி, நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. பெல் நிறுவ-னத்தின் தொழில் நுட்ப அலுவலர்கள், அப்பணியில் ஈடுபட்டுள்-ளனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி முன்னிலையில், தமிழக இ.வி.எம்., மிஷின் சரிபார்க்கும் பணி பார்வையாளரும், பஞ்சாப் மாநில கூடுதல் தேர்தல் கமிஷனரு-மான எஸ்.எஸ்.பால், இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது, 'இ.வி.எம்., சரிபார்க்கும் பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் எவ்வித தடைகளுமின்றி ஓட்டுப்போடும் வகையில் சரிபார்ப்பு பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்-தினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேற்பார்வையில், தாசில்-தார்கள், துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், கிராம உதவியா-ளர்கள் உள்பட, 100 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து, 22 நாட்கள் நடக்கிறது.