ADDED : மார் 28, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
ப.பாளையம்; குமாரபாளையம் தொகுதியில், அ.தி.மு.க.,-தி.மு.க., கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். நான்காவது முறையாக வெற்றிபெற வேண்டும் என, அ.தி.மு.க., கட்சி நிர்வா-கிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த முறை கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், தி.மு.க.,வினரும் பணியாற்றி வருகின்-றனர். இந்நிலையில் கட்சிகளில் உள்ள அதி-ருப்தியாளர்களை கண்டறிந்து அவர்களை தங்களது கட்சியில் சேர்க்கும் முயற்சியும் நடந்து வருகிறது.ஒவ்வொரு கட்சியும், தங்கள் கட்சிக்கு, ஆதரவை பெருக்கும் வகையில், மாற்று கட்சி அதிருப்தியாளர்களிடம் ரகசிய பேச்சு-வார்த்தை நடத்தி வருகின்றனர். இரண்டு கட்சியினரும், மாற்று கட்சி அதிருப்தியா-ளர்களை, தங்களது கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
