தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பிளஸ் 2 பொருளியல் மாணவர்கள் எளிதில் கற்க 'கியூஆர் கோடு' வெளியீடு

பிளஸ் 2 பொருளியல் மாணவர்கள் எளிதில் கற்க 'கியூஆர் கோடு' வெளியீடு

பிளஸ் 2 பொருளியல் மாணவர்கள் எளிதில் கற்க 'கியூஆர் கோடு' வெளியீடு


ADDED : நவ 26, 2024 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொருளியல் மாணவர்கள்

எளிதில் கற்க 'கியூஆர் கோடு' வெளியீடு

நாமக்கல், நவ. 26-

ராசிபுரம் தாலுகா, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொருளியல் துறை முதுகலை ஆசிரியராக பணியாற்றுபவர் சக்திவேல். இவர், மெல்ல கற்கும் மாணவ, மாணவியருக்காக, 'கியூஆர் கோடு' மூலம் கல்வி பயிலும் வகையிலான கையேட்டை உருவாக்கியுள்ளார்.

அவற்றை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேற்று வெளியிட்டார். பிளஸ் 2 பொருளியல் பாடத்தை, மாணவர்கள் சிறந்த முறையில் படித்து தேர்ச்சி பெறவும், மெல்ல கற்கும் மாணவர்களும், எளிதில் புரிந்துகொண்டு தேர்ச்சியுறும் வகையிலும், இந்த, 'கியூஆர் கோடு' உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடங்களை மன வரைபடங்களாக மாற்றியும், எளிய முறையில் நினைவில் கொள்ளும் வகையிலும் ஆசிரியர் சக்திவேல் தயார் செய்துள்ளார்.

மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில், இந்த கையேட்டை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர் செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us