/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடை செய்யப்பட்ட பகுதியான வினாத்தாள் பாதுகாப்பு மையம்
/
தடை செய்யப்பட்ட பகுதியான வினாத்தாள் பாதுகாப்பு மையம்
தடை செய்யப்பட்ட பகுதியான வினாத்தாள் பாதுகாப்பு மையம்
தடை செய்யப்பட்ட பகுதியான வினாத்தாள் பாதுகாப்பு மையம்
ADDED : பிப் 28, 2025 06:47 AM
நாமக்கல்: பிளஸ் -1, பிளஸ் -2 வினாத்தாள்கள் பாதுகாக்கப்படுவதால், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், பிளஸ் -2 தேர்வு வரும் மார்ச், 3ல் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 86 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 9,157 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,461 பேர் தேர்வை எழுத உள்ளனர். இதற்கிடையே, தேர்வுக்கு தேவையான வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், 24 மணி நேர பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவு வாயிலில், அந்நியர்கள் உள்ளே வர அனுமதி இல்லை என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், காலை, மாலை வேளையில், 1,000க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்வர். தற்போது, நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திலும், சாலையோரத்திலும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தடை, தேர்வு முடியும் வரை நீடிக்கும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.