/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
/
அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
அரசியல்வாதிகளை கேள்வி கேளுங்கள் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
ADDED : டிச 19, 2024 07:17 AM
கோவை: ''அரசியல்வாதிகள் வேகமாக செயல்பட, மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்,'' என, பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசினார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில், டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் கோவை - 2024 விருது வழங்கும் விழா, கோவையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: கோவை சுயம்பாக வளர்-கிறது. தமிழகத்தில் உள்ள, 1,626 கல்லுாரிகளில் கோவையில் மட்டும், 441 கல்லுாரிகள் உள்ளன. அதாவது, 27 சதவீத கல்லுா-ரிகள் கோவையில் உள்ளன.
மத்திய அரசின் உதயம் 'போர்ட்டல்' வாயிலாக கோவையில், 2.41 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பது தெரிந்-துள்ளது. சென்னையில், 3.40 லட்சம் நிறுவனங்கள் உள்ளன.தமிழக மாவட்டங்களில், பொருளாதார ரீதியாக முதன்மையாக இருப்பது கோவை. இம்மாவட்டம், 1.86 லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி திறனில் இது, 7.5 சதவீதம். தமிழக அரசு, மூன்று ஆண்டுகளில் மொத்தமாக சம்பாதித்த வரி வருவாய், 4.73 லட்சம் கோடி. இதில் கோவையின் பங்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய். கோவை சிறப்பாக இருக்க காரணமான தொழில்முனைவோருக்கு விருது கொடுப்-பதால், மற்றவர்களுக்கு அது உத்வேகத்தை அளிக்கும்.நீங்கள் அழுத்தம் கொடுத்து எங்களை வேலை வாங்க வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கம், திருச்சி விமான நிலைய ஓடுபாதை நீட்டிப்பு, மதுரையில், ஐ.ஐ.எம்., இப்படி பல திட்டங்-களை செயல்படுத்த பல ஆண்டுகள் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த தமிழக ரயில்வே திட்டத்துக்கு, 26 சதவீதம் மட்டுமே நில ஆர்-ஜிதம், மொத்தம் 40 நெடுஞ்சாலை திட்டத்தில், 18 திட்டங்கள், நிலுவை என, பல திட்டங்கள் முடியாமல் உள்ளன. இதுகுறித்து, அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.கோவையில் இருந்து, 35 ஆயிரம் கோடி அரசுக்கு வழங்கப்பட்-டுள்ளது. அந்த மாவட்டத்துக்கு, அரசு என்ன திருப்பித்தந்துள்ளது என கேள்வி எழுப்ப வேண்டும். வளர்ச்சி சார்ந்த அரசியலை ஏற்-படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.'கைதுாக்கி விடும் இந்தியா'அண்ணாமலை பேசுகையில், ''இந்தியாவில் 2023ம் ஆண்டில், ஒரு நாளில், 95 ஸ்டார்ட் அப்கள் பதிவு, 227 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. ஒரு நாளில், 45 ஆயிரத்து, 205 பேர் தொழி-லாளர் ஈட்டுறுதிக்கழகத்தில் பதிவு, சாலையோர வியாபாரிக-ளுக்கு, 12 கோடி ரூபாய் கடன், முத்ரா கடன் திட்டத்தில், ரூ.1,329 கோடி, 15 கி.மீ., ரயில்வே பாதை, 40.3 கி.மீ., நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, நாடு அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, வேகமாக வளர்வது தெரிகிறது. 2023ல் 2.61 லட்சம் பேருக்கு குழாய் வழியாக குடிநீர், 10 ஆயி-ரத்து, 993 பேருக்கு இலவச வீடு, 1.40 லட்சம் டன் நெல் விளை-விக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 1.67 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுகி-றது. நுாறு நாள் வேலைத் திட்டத்தில், ரூ.242 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு புறம் வளர்ச்சியோடு கூடிய இந்தியாவும் உள்ளது. மற்றொரு புறம், மக்கள் வேகமாக வளர, கைபிடித்து துாக்கி விடும் இந்தியாவும் உள்ளது. வளர்ந்தவர்கள், பலரை கை பிடித்து துாக்கி விடவேண்டும். அப்போது நாடு இன்னும் வேகமாக வளரும்,'' என்றார்.

