/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாய மேம்பாட்டு குழுவுக்கு ரபி பருவ கால பயிற்சி முகாம்
/
விவசாய மேம்பாட்டு குழுவுக்கு ரபி பருவ கால பயிற்சி முகாம்
விவசாய மேம்பாட்டு குழுவுக்கு ரபி பருவ கால பயிற்சி முகாம்
விவசாய மேம்பாட்டு குழுவுக்கு ரபி பருவ கால பயிற்சி முகாம்
ADDED : டிச 01, 2024 01:28 AM
நாமக்கல், டிச. 1-
நாமக்கல் வட்டார வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும், வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா) திட்டத்தில், கீரம்பூர் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு, 'ரபி பருவ கால பயிற்சி' வழங்கப்பட்டது. உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் கோவிந்தசாமி தலைமை வகித்து, 'விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, பல்வேறு முன்னோடி திட்டங்களான முதல்வரின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்', தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்கு திட்டம், வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது' என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் சித்ரா, 'முக்கிய திட்டங்களில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய, 'மாநில வேளாண் வளர்ச்சி திட்டம்', நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீடு மற்றும் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் எவ்வாறு பெறுவது, உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் வழங்கும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், ஒட்டுண்ணிகள் பற்றியும் விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் (ஓய்வு) வைத்திலிங்கம், வேளாண் அலுவலர் காஞ்சனா ஆகியோர், ரபி பருவத்தில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும், நிலக்கடலையில் ஏற்படும் வேர் அழுகல் நோய் மற்றும் மக்காச்சோளப்பயிரில் ஏற்படும் படைப்புழு தாக்குதல், ஒருங்கிணைந்த தென்னை சாகுபடியும், பயிர் பாதுகாப்பு மேலாண் குறித்தும் விளக்கினர். உதவி வேளாண் அலுவலர் மாலதி, துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.