ADDED : ஜூன் 20, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்,  வெண்ணந்துார் காங்., சார்பில் முன்னாள் காங்., தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தினசரி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில், ராகுல் பெயரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. வெண்ணந்துாரில் உள்ள காமராஜர் சிலை அருகில், ராகுல் படம் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நகர தலைவர் சிங்காரம், துணைத் தலைவர்கள் காசிமுத்து, வெங்கடாசலம், உறுப்பினர்கள் தங்கமுத்து, தனபால், செங்கோட்டு வேலு, கணேசன், ராஜவேலு, தமிழ்ச்செல்வன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

