/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயில்வே வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டம்
/
ரயில்வே வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 25, 2025 01:26 AM
ராசிபுரம், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே வளர்ச்சிக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை வணிக ஆய்வாளர் விக்ரமன், போக்குவரத்து ஆய்வாளர் ஜெயச்சிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்டேஷன் மாஸ்டர் ஆதிகேசவன் தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் லோகோந்திரன், தமிழரசன், ஹரிஹரன், சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தற்போது ஸ்டேஷன் மற்றும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கிப்படுகிறது. தற்போது, ராசிபுரத்தில் நடந்துவரும் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷனுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். திருநெல்வேலி-மாதா வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ், மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ், வாஸ்கோட காமா-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ், கடலுார்-மைசூரு எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேலம்-நாமக்கல்-கரூர் வழிப்பாதையில் மாற்றி விடுவதுடன், நாமக்கலில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.