/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் மழை; வெப்பத்தின் தாக்கம் தணிந்தது
/
பள்ளிப்பாளையத்தில் மழை; வெப்பத்தின் தாக்கம் தணிந்தது
பள்ளிப்பாளையத்தில் மழை; வெப்பத்தின் தாக்கம் தணிந்தது
பள்ளிப்பாளையத்தில் மழை; வெப்பத்தின் தாக்கம் தணிந்தது
ADDED : மே 24, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
பொதுமக்கள் வெளியே செல்ல தயக்கமடைந்தனர். இரவு நேரத்தில் அனல் காற்று வீசியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இரண்டு நாட்களாக பகல் முழுவதும் மேக மூட்டமாக, வெயில் தாக்கமின்றி காணப்பட்டதால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.