/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமத்துவபுரத்தில் மழைநீர் தேக்கம்; சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
சமத்துவபுரத்தில் மழைநீர் தேக்கம்; சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
சமத்துவபுரத்தில் மழைநீர் தேக்கம்; சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
சமத்துவபுரத்தில் மழைநீர் தேக்கம்; சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 11, 2024 07:11 AM
நாமக்கல்: சமத்துவபுரத்தில் மழைநீர் தேங்குவதால், அங்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செங்கோடு, பருத்திப்பள்ளி பஞ்., மாரம்பாளையத்தில் பெரியார் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 13 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், பருத்திப்பள்ளியில் உள்ள ஏரி, ஓடையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சமத்துவபுரத்துக்குள் புகுந்து குடியிருப்புகளில் தேங்குகிறது. இதனால், சமத்துவபுரத்தில் வசிக்கும் எங்களுக்கு பல்வேறு நோய்தொற்று ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பருத்திப்பள்ளி, சமத்துவபுரம் மக்களின் நலன் கருதி, சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.