/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்ற போட்டி
ADDED : நவ 13, 2024 07:30 AM
ராசிபுரம்: ராசிபுரம் வட்டார வள மையத்தில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, வானவில் மன்ற போட்டி நடந்தது. ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன், சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகரன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதில், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 34 அரசு பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கட்டுரை போட்டி, அறிவியல் சோதனை மாதிரிகள், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. ராசிபுரம் பாரதிதாசன் சாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவி யர், மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்.