/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரஜினி ரசிகர்கள் வைத்த பிளக்ஸ் பேனர் அகற்றம்
/
ரஜினி ரசிகர்கள் வைத்த பிளக்ஸ் பேனர் அகற்றம்
ADDED : ஆக 07, 2025 01:37 AM
ப.வேலுார், பொத்தனுார் டவுன் பஞ்., பகுதிகளில் அனுமதியின்றி ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை, நமது நாளிதழ் எதிரொலியாக, டவுன் பஞ்., ஊழியர்கள் முற்றிலுமாக அகற்றியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனுமதி பெறாமல் பொத்தனுார் டவுன் பஞ்., பகுதிகளில் ரஜினி ரசிகர் மன்ற பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து, பொத்தனுார் டவுன் பஞ்., நிர்வாகத்திடம், அப்பகுதி மக்கள் புகாரளித்தனர்.இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரஜினி ரசிகர் மன்ற பிளக்ஸ் பேனர்களை பொத்தனுார் டவுன் பஞ்., ஊழியர்கள் நேற்று அகற்றினர். 'அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால், பிளக்ஸ் அச்சடிக்கும் உரிமையாளர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பொத்தனுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.