/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷனில் பாமாயில் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி பேரணி
/
ரேஷனில் பாமாயில் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி பேரணி
ரேஷனில் பாமாயில் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி பேரணி
ரேஷனில் பாமாயில் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி பேரணி
ADDED : மார் 20, 2024 02:03 AM
திருச்செங்கோடு:ரேஷனில்
பாமாயில் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி, திருச்செங்கோட்டில்,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பேரணி நடந்தது.
அதில்,
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, தமிழக அரசால் விற்பனை
செய்யப்படும் பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்வதை ரத்து
செய்ய வேண்டும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்,
நிலக்கடலை எண்ணெய் வகைகளை, மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடந்தது.
தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை
வகித்தார். ப.வேலுார் ரோடு, கரட்டுப்பாளையத்திலிருந்து பேரணியாக
சென்று, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கை மனு
அளித்தனர். பேரணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்
கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.