/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி
/
காவிரி - திருமணிமுத்தாறை இணைக்க வலியுறுத்தி பேரணி
ADDED : செப் 13, 2025 01:37 AM
திருச்செங்கோடு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை, திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, இருசக்கர வாகன பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 25 கிராமங்களை உள்ளடக்கிய, 30 கி.மீ., துாரம், இருசக்கர வாகன பேரணியை, முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ''மேட்டூர் அணை உபரி நீரை, திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மோளிப்பள்ளி ராமசாமி, சட்டசபையில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார். இதற்கு, அப்போதைய அரசு, '50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே, காவிரி - திருமணிமுத்தாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.