/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பா.ஜ., அழைப்பிதழ் வினியோகம்
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பா.ஜ., அழைப்பிதழ் வினியோகம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பா.ஜ., அழைப்பிதழ் வினியோகம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பா.ஜ., அழைப்பிதழ் வினியோகம்
ADDED : ஜன 16, 2024 10:44 AM
ராசிபுரம்,: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை, பா.ஜ., சிறுபான்மையினர் அணியினர், நேற்று வீடு வீடாக சென்று வினியோகம் செய்தனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 22ல் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை, இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு ஏற்பாடு செய்து
வருகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் அழைப்பிதழ், ராமர், லீலா கோவில் படம், அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்டம், ஒன்றியம் நகரம், பேரூராட்சி என தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, அழைப்பிதழ் உள்ளிட்ட பொருட்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. நேற்று நாமக்கல் பகுதியில், பா.ஜ., மாநில சிறுபான்மையினர் அணி செயலாளர் ஷாஜகான், வீடு, வீடாக சென்று அழைப்பிதழை வழங்கினார்.
அதேபோன்று, ஆஞ்சநேயர் கோவில், நாமகிரி அம்மன் கோவில், நரசிம்மர் கோவில் அர்ச்சகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். மேலும், கும்பாபிஷேகம் குறித்து அன்று வீட்டில் விளக்கேற்றுவது குறித்தும் விளக்கி கூறினார்.