/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்
/
ரம்ஜான் சிந்தனைகள்-2 :நல்ல எண்ணம் வேண்டும்
ADDED : மார் 13, 2024 02:33 AM
“நல்ல எண்ணம் இல்லாததால் எத்தனையோ பெரிய நன்மைகள், அற்ப செயலாகி விடுகின்றன' என்கிறார் நபிகள் நாயகம்.
அதே நேரத்தில் துாய நினைவுடன் செய்யப்படும் சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறுகின்றன. செயல்கள் எல்லாம் அதன் எண்ணத்தைப் பொறுத்தே நடக்கின்றன. வறுமை, துன்பம் ஏற்படும் காலத்தில் நல்ல எண்ணத்துடன் செயல்படுபவனே புண்ணியவான். சண்டையில் எதிரிகளை வீழ்த்துவதை விட விட்டுக் கொடுப்பவனே வீரன். இறைவன் உங்களின் உருவம், கோலங்களையும், சொத்து சுகங்களையும் பார்ப்பதில்லை. அவன் உள்ளங்களையும், செயல்களையும் பார்த்தே தீர்ப்பளிக்கிறான்.
உள்ளம் மட்டுமின்றி உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, ''நீங்கள் சுத்தமுடையவர்களாக இருங்கள். ஏனெனில் சுத்தமுடையவனே சுவர்க்கத்தில் நுழைவான். இறைவன் பரிசுத்தமானவன், பரிசுத்தத்தையே விரும்புகிறான். இறைவன் மணமுள்ளவன், நறுமணத்தை விரும்புகிறான். எனவே உங்கள் இல்லங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.” என்கிறார்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி

