/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'ரேபிடோ கேப்டன்' செயலி பயன்படுத்த அனுமதியில்லை
/
'ரேபிடோ கேப்டன்' செயலி பயன்படுத்த அனுமதியில்லை
ADDED : நவ 08, 2025 04:12 AM
நாமக்கல்: 'மாவட்ட எல்லைக்குள், 'ரேபிடோ கேப்டன்' என்ற செயலி பயன்படுத்தி, வாகனங்களை வாடகைக்கு இயக்க அனுமதி வழங்-கவில்லை' என, நாமக்கல் வட்டார போக்குவரத்து அலு-வலர்(தெற்கு) முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட எல்லைக்குள், 'ரேபிடோ கேப்டன்' என்ற செயலி பயன்படுத்தி, வாகனங்களை வாடகைக்கு இயக்குவதற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. சிலர் மேற்கண்ட செயலியை பயன்படுத்தி வாகனங்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு வாகனம் இயக்கினால், வாகனம் பறிமுதல் செய்யப்-பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓட்டுனர் உரிமம், பதிவுச்-சான்று ஆகியவற்றை பறிமுதல் செய்ய நேரிடும். மேலும், விபத்து ஏற்படும்பட்சத்தில், இழப்பீடு கிடைக்காமல் போகும். 'ரேபிடோ கேப்டன்' என்ற செயலி பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

