/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு
ADDED : நவ 06, 2024 01:32 AM
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு
ராசிபுரம், நவ. 6-
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழுவினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளனர்.
ராசிபுரம் நகர பஸ் ஸ்டாண்ட் மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணி, கோபால், ம.தி.மு.க., ஜோதிபாசு, பா.ஜ., சேதுராமன், கம்யூ., மணிமாறன், வணிகர் சங்கத்தை சேர்ந்த பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ராசிபுரம் நகர்மன்ற கூட்டத்தில், அணைப்பாளையத்திற்கு பஸ் ஸ்டாண்டை மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலருக்கு, கூட்டமைப்பு சார்பிலும், ராசிபுரம் நகர மக்கள் சார்பிலும் நன்றி. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட, 23 உறுப்பினர்களை, வன்மையாக கண்டிக்கிறோம்.
ராசிபுரம் நகராட்சி அருகே உள்ள கட்டனாச்சம், புதுப்பாளையம், பட்டணம் டவுன் பஞ்சாயத்து, ராசிபுரம் நகரத்தின் நுழைவாயிலாக விளங்கக்கூடிய ஆண்டகளூர் கேட் உள்ளடக்கிய குருக்கபுரம் ஊராட்சிகளை இணைக்ககாமல், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவே அணைப்பாளையம், முருங்கப்பட்டி, சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம் முத்துக்காளிப்பட்டி கோனேரிப்பட்டி ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் மீட்பு கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வரும், 22ல் சென்னையில் குறளகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. பஸ் ஸ்டாண்ட் மாறுதலை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என, தீர்மானிக்கப்பட்டது.

