/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் சைபர் கிரைம் பெயரில் பணம் பறிக்க புதுவகை மோசடி
/
ராசிபுரம் சைபர் கிரைம் பெயரில் பணம் பறிக்க புதுவகை மோசடி
ராசிபுரம் சைபர் கிரைம் பெயரில் பணம் பறிக்க புதுவகை மோசடி
ராசிபுரம் சைபர் கிரைம் பெயரில் பணம் பறிக்க புதுவகை மோசடி
ADDED : அக் 09, 2024 06:22 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் சில நாட்களாக சைபர் கிரைம் பெயரில் பணம் பறிக்கும் மோசடி தொடங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'ராசிபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகம்' என, பேசத்தொடங்கும் நபர், மறுமுனையில் பேசுபவர்களிடம் இந்த செல்போன் எண்ணை எத்தனை ஆண்டுகளாக பயன்படுத்துகிறீர்கள். இந்த எண் மீது சைபர் கிரைமில் வழக்கு ஒன்றுள்ளது. இதை சரி செய்ய நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும் என, மிரட்டுகிறார்.
எதிரில் பேசுபவர்கள் பயந்து கொண்டு அபராதம் செலுத்த சம்மதம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தால் விசாரணை அதிகம் இருக்கும், அதனால், 'ஜிபே'யில் அபராதத்தை செலுத்தி விடுங்கள் என, கூறுகிறார். நேற்று மட்டும் ராசிபுரம் பகுதியில், 3 பேருக்கு இதுபோல் மொபைல் அழைப்பு வந்துள்ளது. அந்த மூவரும், போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்த போது, போனில் பேசியது மோசடி நபர் என்றும், சண்முகம் என்ற பெயரில் ராசிபுரம் ஸ்டேஷனில் யாரும் இல்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து, மூவரும் குறிப்பிட்ட மொபைல் போன் நெம்பரை குறித்து கொடுத்து புகாரளித்துள்ளனர். புகாரளித்தவர்கள், 3 பேர் மட்டுமே. ஆனால், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது இந்த மொபைல் அழைப்பு குறித்து எச்சரிக்கை தகவல்களை ராசிபுரம் பகுதியில் உள்ள, 'வாட்ஸாப்' குழுக்களில் அனுப்பி வருகின்றனர்.

