/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறுவடைக்கு தயாரான ரஸ்தாளி கரும்பு: ஒரு ஜோடி ரூ.130க்கு விற்பனை
/
அறுவடைக்கு தயாரான ரஸ்தாளி கரும்பு: ஒரு ஜோடி ரூ.130க்கு விற்பனை
அறுவடைக்கு தயாரான ரஸ்தாளி கரும்பு: ஒரு ஜோடி ரூ.130க்கு விற்பனை
அறுவடைக்கு தயாரான ரஸ்தாளி கரும்பு: ஒரு ஜோடி ரூ.130க்கு விற்பனை
ADDED : ஜன 30, 2025 05:07 AM
நாமக்கல்: விவசாயிகள் பெரும்பாலும் சர்க்கரை, வெள்ளத்திற்காக நாட்டு வெள்ளை கரும்பு, பண்டிகை காலத்திற்காக செங்கரும்பு ஆகி-யவை பயிரிடுகின்றனர். இதில் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கும் ரஸ்தாளி கரும்பு என்ற வெள்ளை நிறம் கொண்ட கரும்பு, நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில் நடக்கும் தைப்பூச தேர்த்திருவிழாவில் அதிகளவு விற்பனை செய்-யப்படும்.
தேர்த்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், பெரும்பாலும் இந்த ரஸ்தாளி கரும்பை ஆர்வமுடன் வாங்கிச்செல்வர். செங்க-ரும்பை விட இலகுவாகவும், சுவையாகவும் இருப்பதால் சிறு-வர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடு-கின்றனர். தற்போது, திருச்செங்கோடு தாலுகா, மங்களம் அடுத்த மேட்டாங்காடு பகுதி விவசாயிகள் ரஸ்தாளி கரும்பை அதிகம் பயிரிட்டுள்ளனர்.இதுகுறித்து, மேட்டாங்காட்டை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 70, கூறியதாவது: நான் கடந்த, 20 ஆண்டுகளாக ரஸ்தாளி கரும்பு பயி-ரிட்டு வருகிறேன். காளிப்பட்டி அடுத்த சின்ன உப்புபாளைம், கல்லேரி, அரியாம்பாளையம், கடலுார் மாவட்ட பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் மட்டும் ரஸ்தாளி கரும்பு பயிரிடு-கிறோம். 10 மாத பயிரான ரஸ்தாளி கரும்பை தற்போது எங்கள் தோட்டத்தில், 50 சென்ட் நிலத்தில் பயிரிட்டுள்ளோம். தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு அறுவடை செய்து, ஒரு ஜோடி கரும்பு, 80 ரூபாயில் இருந்து, 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச்செல்-கின்றனர். சுவை மிகுந்தும், கடிப்பதற்கு இலகுவாகவும் இருப்-பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

