ADDED : ஜூன் 14, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:பொது
வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம், மாவட்டத்தில், நாமக்கல்,
ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு,
ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய, எட்டு தாலுகா அலுவலகங்களில் நடந்தது.
அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமை வகித்தனர்.
நாமக்கல்லில் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரவள்ளி தலைமையில் நடந்த
முகாமில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், மொபைல் எண் மாற்றம் உள்பட,
39 மனுக்கள் பெறப்பட்டு, இவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது.
அதேபோல், மாவட்டம் முழுவதும் நடந்த முகாம்களில், மொத்தம், 291 மனுக்கள்
பெறப்பட்டு, அவை அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
