ADDED : அக் 25, 2024 08:03 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., வளைவு பகுதி அருகே, சித்தி விநாயகர் கோவில் எதிரில் மீன் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில், திருச்செங்கோடு ஆர்.டிஓ., ஆய்வு செய்தார்.
பள்ளிப்பாளையம் பகுதியில், திருச்செங்கோடு செல்லும் சாலையில் ஆர்.எஸ்., வளைவு அருகே சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இதன் எதிரில் நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில், நேற்று சிலர் மீன் கடைகள் அமைக்க, செட் போடுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை லாரியில் கொண்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட மக்கள், திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மீன் கடை அமைக்கும் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, மீன் கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தை ஆய்வு செய்தார். பின் அப்பகுதி மக்களிடமும், மீன் கடை அமைக்க வந்தவர்களிடமும் விசாரணை செய்தார்.
