ADDED : மார் 04, 2026 09:19 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:குமாரபாளையம்
காளியம்மன் கோவிலில் மகா குண்டம் மற்றும் தேர் திருவிழாவையொட்டி, மறு
பூச்சாட்டுதல் விழா, நேற்று நடந்தது. முன்னதாக, காவிரி
ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. நேற்று, மறு
பூச்சாட்டுதல் நடந்தது.
இன்று, கொடியேற்றம், வரும், 10ல் அம்மனுக்கு
பக்தர்கள் புனித நீர் ஊற்றுதல், தேர்க்கலசம் வைத்தல், காவிரி ஆற்றில்
சக்தி அழைத்து வருதல், 11ல் மகா குண்டம் இறங்குதல், பொங்கல் ஆராதனை, 12ல்
அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா புறப்பாடு, வண்டி
வேடிக்கை, 13ல் தேர் நிலை சேர்த்தல், வாண வேடிக்கை, நாதஸ்வர இசையுடன்,
அம்மன் அலங்கார திருவீதி உலா நடக்கிறது.
