/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் பிரச்னையை தீர்மானமாக வைக்க மறுப்பு: கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

ADDED : அக் 03, 2024 07:20 AM
எருமப்பட்டி: போடிநாய்க்கன்பட்டி பஞ்.,ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், மக்கள் பிரச்னையை தீர்மானமாக வைக்க மறுப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து பஞ்.,களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதேபோல், நேற்று எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டி பஞ்.,லும் கிராம சபை கூட்டம் நடந்தது. தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் அருள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், 'கொல்லிமலை அடிவாரம், போடிநாய்க்கன்பட்டி கோம்பையில் இருந்து, 20 அடி ஆழம் வரை மண் வெட்டி எடுப்பதால் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் மண் லாரிகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க வேண்டும்.
வடக்கு தெருவில் இருந்து வணிக பணிக்காக செல்லும் லாரிகளை தடுக்க பஞ்.,ல் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என, தலைவரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதை தீர்மானமாக வைக்க முடியாது என, தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.